அவ்வப்போது ட்விட்டர், பேஸ்புக் தளங்களில் எழுதியவை!
காலையில் உன்
பாதங்கள் வரையப் போகிற
ஓவியத்திற்காய்,
இரவெல்லாம் தூங்காமல்
தவம் கிடக்கிறது
உன் குளியலறை வாசலில் மிதியடி!
குளிக்கப் போவதாய்
குறுஞ்செய்தி சொல்கிறாய்
நீரின் உறைநிலையில் மனசு;
கொதிநிலையில் வயசு!
குளித்து முடித்து
கூந்தலுக்குச் சிக்கெடுக்கிறாய்;
எனக்கு 'கிக்'கெடுக்கிறது!
மழையில் நனைய மறுக்குமென்னை
"மழை ஒன்னும் கரச்சிடாது" என்று
கை பிடித்து இழுக்கிறாய்
காதல் மழையில்
கல்நெஞ்சைக் கரைக்கிறாய்
ஒட்டு மொத்தமாய்
நீ ஈர்த்துக் கொள்ளவும்
பிறகென் மேல்
வார்த்துப் போகவும்
வந்து கொண்டிருக்கிறது
மழை!
உன் மார்கழிக்
கோலங்கள்
மறுபிறவி பெற்றே
வானவில்லாகின்றது!
உன் கோபம் குறைக்கிற
என் கெஞ்சல்களிலும்,
என் சோகம் கரைக்கிற
உன் கொஞ்சல்களிலும்
கடலலையாய் துள்ளியெழும்
காதலில் தத்தளிக்கிறது,
உலகமறிந்திருக்கிற நம் நட்பு!
பிரபஞ்சத்தின் வெற்றிடங்களை
மனசுக்குள் நிரப்புகிறது
உன் மௌனத்தில்
கரைகிற
நிமிடங்கள்!
மௌனம் சுமக்கும்
இந்த ஊடலைக் கொன்றிட
உடனடியாய்த் தேவையொரு
இதழ் யுத்தம்!
உன் ஒருத்தியின்
பிரிவைச் சமன் செய்ய
போராடித் தோற்கின்றன
ஒரு நிலவும், சில நூறு நட்சத்திரங்களும்!
சிறு தூறலில்
உயிர்பித்துக் கொண்ட
நத்தையென
நெளியத் தொடங்கியிருக்கிறாய்
நினைவடுக்கில்!
காலையில் உன்
பாதங்கள் வரையப் போகிற
ஓவியத்திற்காய்,
இரவெல்லாம் தூங்காமல்
தவம் கிடக்கிறது
உன் குளியலறை வாசலில் மிதியடி!
குளிக்கப் போவதாய்
குறுஞ்செய்தி சொல்கிறாய்
நீரின் உறைநிலையில் மனசு;
கொதிநிலையில் வயசு!
குளித்து முடித்து
கூந்தலுக்குச் சிக்கெடுக்கிறாய்;
எனக்கு 'கிக்'கெடுக்கிறது!
மழையில் நனைய மறுக்குமென்னை
"மழை ஒன்னும் கரச்சிடாது" என்று
கை பிடித்து இழுக்கிறாய்
காதல் மழையில்
கல்நெஞ்சைக் கரைக்கிறாய்
ஒட்டு மொத்தமாய்
நீ ஈர்த்துக் கொள்ளவும்
பிறகென் மேல்
வார்த்துப் போகவும்
வந்து கொண்டிருக்கிறது
மழை!
உன் மார்கழிக்
கோலங்கள்
மறுபிறவி பெற்றே
வானவில்லாகின்றது!
உன் கோபம் குறைக்கிற
என் கெஞ்சல்களிலும்,
என் சோகம் கரைக்கிற
உன் கொஞ்சல்களிலும்
கடலலையாய் துள்ளியெழும்
காதலில் தத்தளிக்கிறது,
உலகமறிந்திருக்கிற நம் நட்பு!
பிரபஞ்சத்தின் வெற்றிடங்களை
மனசுக்குள் நிரப்புகிறது
உன் மௌனத்தில்
கரைகிற
நிமிடங்கள்!
மௌனம் சுமக்கும்
இந்த ஊடலைக் கொன்றிட
உடனடியாய்த் தேவையொரு
இதழ் யுத்தம்!
உன் ஒருத்தியின்
பிரிவைச் சமன் செய்ய
போராடித் தோற்கின்றன
ஒரு நிலவும், சில நூறு நட்சத்திரங்களும்!
சிறு தூறலில்
உயிர்பித்துக் கொண்ட
நத்தையென
நெளியத் தொடங்கியிருக்கிறாய்
நினைவடுக்கில்!
6 comments:
super tambi..I like it..!
good one tambi..!
Hey good one.. kani
Hey nalla irukku..
super
super
Post a Comment