Sunday, October 12, 2008

யாரோ?

கார் காலம்..
கருப்பு-வெள்ளை வானம்..
பச்சை பசேல் பூமி..
இரண்டையும் இணைக்கிற மழை தூறல்..
மழையை வரவேற்க குளிர் பனிக்காற்று..
இப்படி இத்தனை இருந்தும்
வார்த்தைகளின்றி தவிக்கிறது என் கவிதை முயற்சி!
எங்கிருக்கிறாய் என் காதலியே...?

Sunday, September 21, 2008

மழை சொல்லும் சேதி..

எதிர் பாராமல் பெய்த
மழையை
எல்லோரும் ரசிக்கிறார்கள்...
நான் மட்டும்
வியக்கிறேன்...
மேகங்கள் கட்டிக்கொள்ள
வானம் அழுகிறதோ? - நம் தற்காலிக பிரிவுக்கு....!

Saturday, September 20, 2008

நெடுஞ்சாலையும் நினைவுகளும்..

இந்த பௌர்ணமி இரவு முழுவதும்
என்னுடனே பயணித்த
நிலவுக்கு
நிச்சயமாய் தெரிந்திருக்கும்,
உன்னை எவ்வளவு காதலிக்கறேன் என்று!

--------------------

நீளும் நெடுஞ்சாலை பயணத்தில்
கூடவே பயணித்து விட்டு
மறைந்து விடும் மரம், மலை, ஆறு போல்
விலகியே செல்கிறாய் நீ..
காற்றாக என்னுடனே பயணிக்கிறது
உன் காதல்!

-------------------

ஒன்றரை மணி நேர
பயணத்தில்
ஓராயிரம் கதை பேசி
வருகிறாய் நீ, எந்த சலனமுமின்றி..
நூறாயிரம் ஆண்டுகளுக்கான
சந்தோசத்தை ஒட்டு மொத்தமாய்
தருகிறாய் என்பதை உணர முடிகிறதா?

-------------------

எந்த தொலை தூர பயணமும்
வெகு நேரமாய் தெரிவதில்லை
வழித் துணையாய் உன் நினைவுகள்
கூடவே வருவதனால்...

-------------------

அவள்..

நட்பு, காதல் மற்றும்
இன்ன பிற உறவுகளுக்குள்
வரையறுக்க முடியாத - ஆனால்
என் வானளாவிய அன்புக்குச் சொந்தக்காரி!